இந்தியா

பாரத ரத்னா விருதுகளை வழங்கினார் குடியரசுத்தலைவர்

பிடிஐ

புது தில்லி: புது தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில், எல்.கே. அத்வானி உள்ளிட்டோருக்கு பாரத ரத்னா விருதுகளை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

நாட்டிலேயே மிக உயரிய விருதாகக் கருதப்படும் பாரத ரத்னா விருதுகளை வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது.

இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதுகளை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். நரசிம்மராவ் சார்பில் அவரது மகன் பி.பி. பிரபாகர் ராவ் பெற்றுக்கொண்ர். சரண் சிங் சார்பில், அவரது பேரன் ஜெயந்த் சௌதரி, குடியரசுத் தலைவரிடமிருந்து விருதினை பெற்றுக்கொண்டார்.

மேலும், பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம்.எஸ். சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் கடந்தாண்டு காலமான நிலையில், அவரது மகள் நித்யா ராவ் விருதுதினை பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, மறைந்த பிகார் மாநில முன்னாள் முதல்வரும் சோஷலிச தலைவருமன கர்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இன்று நடைபெற்ற விழாவில், அவரது மகன் ராம் நாத் தாக்குர் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு, நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி உள்பட 5 பேருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஐடி வேந்​தர் கோ.வி​சு​வ​நா​த​னுக்கு மேலும் ஒரு கௌ​ரவ டாக்​டர் பட்டம்

நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு

பாலம் கட்டுமானப் பணிகள்: ஆணையர் ஆய்வு

'இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்: மம்தா பானர்ஜி

லக்னௌவை வென்றது டெல்லி: "பிளே-ஆஃப்' சுற்றில் ராஜஸ்தான்

SCROLL FOR NEXT