இடுக்கி அணை 
இந்தியா

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

இடுக்கி அணையின் நீர்மட்டம் 2,280 அடிக்கு கீழ் சென்றால் மூலமட்டத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது.

DIN

கொச்சி: கோடை வெப்பம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், இடுக்கி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகின்றது.

அணையின் மொத்த கொள்ளளவில் 35 சதவிகிதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 2,337 அடியாக உள்ளது.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் அதிகளவில் மின் உற்பத்தி செய்யபட்டதால் அணையின் நீர்மட்டம் 2,330-ஆக இருந்தது. ஆனால், நிகழ்வாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் உற்பத்தி குறைக்கப்பட்ட போதிலும் அணையின் நீர்மட்டம் 2,337 அடியாக குறைந்துள்ளது.

மேலும், அணையின் நீர்மட்டம் 2,280-க்கும் குறைவாக சென்றால் குழாய் வழியாக மூலமட்டத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனை தவிர்க்க மூலமட்டத்தில் உள்ள 6 மின்சார உற்பத்தி கலன்களில் 5-ஐ மட்டுமே கேரள மின்வாரியம் உபயோகித்து வருகின்றது. உற்பத்திக்கு பிறகு 45.349 மீட்டர் அளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

மேலும், அதிக மின்நுகர்வு ஏற்பட்டால் மாற்று முறைகளை பின்பற்ற கேரள அரசுடன் மின்வாரியம் ஆலோசித்து வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக யூத் வில்வித்தை: 2 தங்கம் வென்றது இந்தியா

என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசால் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற முடியாது: முன்னாள் முதல்வா்!

இரவு நேர வாகன சோதனைக்காக ஒளிரும் வேகத்தடுப்பான்கள்!

ஊழல் பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை: கி. வீரமணி

உடல் எடை குறைப்பு குறித்த தவறான விளம்பரம்: விஎல்சிசி நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT