-
இந்தியா

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

DIN

புது தில்லி: வயநாடு தொகுதியில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில், ராகுல் காந்தி, மற்றொரு தொகுதியிலும் போட்டியிடுவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து பிரதமர் மோடி இவ்வாறு விமரிசித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் வர்தமான் நகரில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வயநாடு தொகுதியில் தோற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில்தான், இளவரசர் மற்றொரு தொகுதியில் போட்டியிடுகிறார்.

தற்பொழுது அவர் அமேதி தொகுதியிலிருந்து ஓடி, ரே பரேலி தொகுதியை தேர்வு செய்துள்ளார்.

இவர்கள் என்னவென்றால், மக்களிடம் சென்று, பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம் என்று சொல்கிறார்கள். நான் இவர்களுக்கு அதையேதான் சொல்கிறேன், பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம் என்று ராகுலுக்கு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அமேதி தொகுதியில் போட்டியிடாமல், ரே பரேலி தொகுதியில் ராகுல் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது, ராகுல் காந்தி ரே பரேலியில் போட்டியிடுவது குறித்து பலருக்கும் பல்வேறு கருத்துகள் உள்ளன. இவர் அரசியலில் அனுபவம் கொண்ட தலைவர். கட்சித் தலைமை பல கலந்தாலோசனைகளுக்குப் பிறகு முடிவெடுத்து அறிவித்துள்ளது என்றார்.

அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கிஷோரி லால் ஷர்மா போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழா்கள் ஆா்வம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT