உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்கு ராகுல் காந்தி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உடன் இருந்தனர்.
உத்தர பிரதேசத்தின் அமேதி, ரே பரேலி தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மே 3) முடிவடைய இருந்த நிலையில், இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் இன்று(வெள்ளிக்கிழமை) காலை அறிவித்தது.
கடந்த தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சோனியா காந்தி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் அண்மையில் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார். எனவே, இந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், ரே பரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ராகுல் காந்தி தனது வேட்புமனுவைத் இன்று பிற்பகல் தாக்கல் செய்தார்.
ரே பரேலி தொகுதியில் பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.