உத்தரகண்ட் மாநிலம் டேஹ்ராடூன் மாவட்டத்தில் கார் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகினர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.
இந்த சம்பவம் உத்தரகண்டின் ஜாதிபானி சாலையில் உள்ள முசோரி டெஹ்ராடூன் மார்க்கில் உள்ள பானிவாலா பேண்ட் அருகே நடைபெற்றது.
விபத்து தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் பிரமோத் குமார் கூறுகையில், கார் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். மாணவி ஒருவர் பலத்த காயமடைந்தார். காயமடைந்த நான்சி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
டெஹ்ராடூன் ஐஎம்எஸ் கல்லூரியைச் சேர்ந்த 4 மாணவர்கள், 2 மாணவிகள் உள்பட 7 பேர் சுற்றுலா செல்வதற்காக முசோரிக்குச் சென்று டெஹ்ராடூனுக்கு திரும்பும்போது கார் ஓட்டுநரின் நிலைதடுமாறி அருகிலிருந்த ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுதொடர்பாக போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.