முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: 7 பயங்கரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

Updated On : 7 மே, 2024 at 8:47 PM
பகிர்:

ஸ்ரீநகா்: பாகிஸ்தானை மையமாகக்கொண்ட பயங்கரவாத அமைப்புகளில் இணைந்து செயல்பட்ட ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 7 பேரின் சொத்துகள் முடக்கப்பட்டதாக பாரமுல்லா மாவட்ட காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் பயங்கரவாதிகளின் நிலங்கள் முடக்கப்பட்டன.

முன்னதாக, பயங்கரவாதிகள் குறித்து காவல் துறையினா் மேற்கொண்ட விசாரணையில் இந்த சொத்துகளின் விவரம் தெரியவந்தது. முடக்கப்பட்ட நிலங்கள் பல லட்சம் மதிப்புடையவை என காவல்துறையினா் தெரிவித்தனா்.

சபீா் அஹமது, குலாம் நபி, குலாம் நபி ஷேக், சரீஃப் உத்தின், குலா ஷேக், முகமது ரபீக் கான், அப்துல் ஹமீத் பா்ரே ஆகிய பயங்கரவாதிகளின் நிலங்கள் முடக்கப்பட்டுள்ளன.