NSE-PTI1070706.JPG

 
Center-Center-Delhi
இந்தியா

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: எங்கே ?

DIN

பங்குச் சந்தை ஜாம்பவான் என அறியப்படும் மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்டுள்ளார். என்ன தவறானது? எந்த பங்குச் சந்தை காலைவாரியது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

பங்குச் சந்தைகளில் அதிக முதலீடுகளை செய்து, நல்ல லாபம் ஈட்டி ஜாம்பவானாக விளங்கியவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. அவரது மறைவுக்குப் பிறகு, அவரது பணியை மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா மேறகொண்டு வருகிறார்.

இந்த நிலையில்தான், மே 6ஆம் தேதி, ரேகா ஜுன்ஜுன்வாலா ரூ.800 கோடி சரிவைச் சந்தித்துள்ளார். இவர் டைட்டன் நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்திருந்தார். நேற்று வணிக நேரத்தின்போது, டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் 5 சதவீதம் சரிவைக் கண்டன.

2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, டாடா குழும நிறுவனங்களில் ஒன்றான டைட்டன் நிறுவனத்தின் 5.35 சதவீத பங்குகளை ரேகா ஜுன்ஜுன்வாலா வைத்திருந்தார். அதன்படி, டைட்டன் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட குறிப்பில், ரேகா ஜுன்ஜுன்வாலா வைத்திருந்த பங்குகளின் மதிப்பு ரூ.16,792 கோடியாகும்.

வெள்ளிக்கிழமை மாலை அந்நிறுவனத்தின் பங்குகள் ரூ.3,13,868 கோடியாக இருந்த நிலையில், திங்களன்று 3 லட்சம் கோடிக்கும் குறைந்து ரூ.2,98,815 கோடியாகச் சரிந்தது.

இதனால், இந்நிறுவனத்தில் ரேகா ஜுன்ஜுன்வாலா வைத்திருக்கும் பங்குகளின் மதிட்பபு ரூ.15,986 கோடியாக சரிவடைந்தத. இது கிட்டத்தட்ட ரூ.805 கோடியாகும்.

டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் இந்த அளவுக்கு சரிவடைந்திருந்த நிலையில் அந்நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை வெளியானது. அதில், நிகர லாபம் 7 சதவீதமாக இருந்ததாகவும், அதன் மதிப்பு ரூ.786 கோடி என்று காட்டப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு இதேக் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.734 கோடியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT