எச்.டி.ரேவண்ணா 
இந்தியா

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல்!

எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14 வரை நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

DIN

பாலியல் புகாரில் சிக்கிய ம.ஜ.த. கட்சித் தலைவர் எச்.டி.ரேவண்ணாவுக்கு மே 14-ம் தேதி வரை நீதிமனறக் காவல் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் தேவெகௌடாவின் மூத்த மகன் எச்.டி.ரேவண்ணா எம்.எல்.ஏ மற்றும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி ஆகியோர் மீது பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை விடியோ எடுத்து வைத்திருந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இதற்கிடையே மைசூரு கே.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் எச்.டி.ரேவண்ணா மீது ஒரு பெண்ணை கடத்தியதாகக் கூறி புதிதாக வழக்கும்பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்தார். எச்.டி.ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட அடுத்த சில நிமிடத்தில் சிறப்புப் புலனாய்வு குழு போலீஸார் அவரை அதிரடியாக கைது செய்து, மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்த நிலையில், 3 நாள் போலீஸ் காவலில் இருந்த ரேவண்ணா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து ரேவண்ணாவை மே 14 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT