இந்தியா

சர்ச்சைப் பதிவு: ஜெ.பி. நட்டாவுக்கு காவல் துறை சம்மன்

சர்ச்சைக்குரிய வகையில் விடியோ பதிவிட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஜெ.பி. நட்டாவுக்கு கர்நாடக காவல் துறை சம்மன்

DIN

சர்ச்சைக்குரிய வகையில் விடியோ பதிவிட்டதாக பாஜக தேசிய செயலாளர் ஜெ.பி. நட்டாவுக்கு கர்நாடக காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கர்நாடக மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் விடியோ பதிவிட்டது தொடர்பாக, பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியாவுக்கும் கர்நாடக காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஜெ.பி. நட்டா மற்றும் அமித் மாளவியா ஆகிய இருவரும் அடுத்த 7 நாள்களுக்குள் ஆஜராக வேண்டும் எனவும் சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் நலனுக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி செயல்படுவதாக, இந்துக்கள் மத்தியில் பகையுணர்வை ஏற்படுத்தும் வகையில் கர்நாடக பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், பதிவிடப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பதிவின் நோக்கம் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு எதிரானதாக உள்ளதாகவும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகார்ம தொடர்பாக அடுத்த 7 நாள்களுக்குள் அல்லது 7வது நாள் காலை 11 மணியளவில் ஜெ.பி. நட்டா மற்றும் அமித் மாளவியா ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாகனங்களுக்கு கட்டண விலக்கு!

எஸ்ஐஆா் பணியில் குறைபாடு: மேற்கு வங்க வாக்குச்சாவடி அலுவலா்கள் 7 பேருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

சௌா்ய சைனிக்கு வெள்ளி

எஸ்ஐஆருக்கு எதிரான புதிய மனுக்கள்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சாலை விபத்தில் உயரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 38.86 லட்சம் இழப்பீடு

SCROLL FOR NEXT