முகப்பு
இந்தியா

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

மும்பையில் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 8 மே 2024, 9:30 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பையில் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கடையில் பணிபுரிந்த இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வடகிழக்கு மும்பையிலுள்ள ட்ரோம்பே பகுதியின் சாலையோரக் கடையில் 19 வயதான பிரதமேஷ் போக்சே என்பவர் மே 3ஆம் தேதி ஷவர்மா வாங்கியுள்ளார். இரவு உணவாக அதனை உண்ட அவருக்கு மே 4ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவர் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

Advertisement

Advertisement

எனினும் வயிற்று வலி சரியாகாததால் நகரப் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அவரின் குடும்பத்திரன் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். தொடர்ந்து உடல்நலக் குறைவுடன் காணப்பட்டதால் மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்து வந்த நிலையில், திடீரென உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் ஷவர்மா கடையில் பணிபுரிந்த இருவரை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments