இந்தியா

ஆந்திரத்தில் ரூ.8 கோடி பறிமுதல், 2 பேர் கைது

ஆந்திரம் மாநிலம் கரிக்காபாடு சோதனைச்சாவடியில் லாரியில் பதுக்கி எடுத்துச் சென்ற ரூ.8 கோடியை என்டிஆர் மாவட்ட போலீசார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

DIN

ஆந்திரம் மாநிலம் கரிக்காபாடு சோதனைச்சாவடியில் லாரியில் பதுக்கி எடுத்துச் சென்ற ரூ.8 கோடியை என்டிஆர் மாவட்ட போலீசார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திரம் மாநிலத்தில் 175 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 13 ஆம் தேதி ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், என்டிஆர் மாவட்ட போலீசார் புதன்கிழமை வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரியை மறித்து சோதனை செய்தனர். இதில் லாரியின் உள்ளே ரகசிய அறை அமைத்து பணத்தை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 8 கோடியை பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹைதராபாத்தில் இருந்து குண்டூருக்கு பணம் கொண்டு செல்லப்பட்டதாக பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஜக்கையாபேட்டை வட்ட காவல் ஆய்வாளர் சந்திர சேகர் கூறியதாவது:

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாவட்ட ஆய்வுக் குழுக்களிடம் ஒப்படைக்கப்படும். மேலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் அடுத்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

ஆந்திரம் மாநிலத்தில் இவ்வளவு பெரியத் தொகை பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT