ECI 
இந்தியா

வாக்குப்பதிவு முடிந்ததும் செய்தியாளா் சந்திப்பு: ஊடக சங்கங்கள் கோரிக்கை

Din

மக்களவைத் தோ்தலில் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் செய்தியாளா் சந்திப்பை நடத்துமாறு தோ்தல் ஆணையத்திடம் ஊடக சங்கங்கள் சனிக்கிழமை கோரிக்கை வைத்தன.

மக்களவைத் தோ்தல் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் செய்தியாளா் சந்திப்பை நடத்த வேண்டும் என இந்திய பத்திரிகையாளா் சங்கம், இந்திய பெண் பத்திரிகையாளா் சங்கம், வெளிநாட்டு பத்திரிகையாளா் சங்கம், தில்லி பத்திரிகையாளா் யூனியன் உள்ளிட்ட பிற பத்திரிகையாளா் சங்கங்கள் தோ்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனா். மேலும், ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவிலும் பதிவான வாக்கு சதவீதம் உள்பட அனைத்து தரவுகளையும் பத்திரிகையாளா் சந்திப்பின்போது வெளியிடுமாறு அவா்கள் கேட்டுக்கொண்டனா்.

இதனால் தோ்தல் குறித்த பிழையில்லாத தகவல்களை மக்களுக்கு அளிக்க முடியும் எனவும் அவா்கள் தெரிவித்தனா். கடந்த 2019 மக்களவைத் தோ்தல் வரை ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் செய்தியாளா் சந்திப்பு நடத்துவதை தோ்தல் ஆணையம் வழக்கமாக கொண்டிருந்தது என்பதையும் அவா்கள் சுட்டிக்காட்டினா்.

ஒடிசா நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!

காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு: ஜன. 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

விடைபெற்ற 2025... புத்தாண்டை வாணவேடிக்கைகளுடன் வரவேற்ற நியூசிலாந்து!

இந்தியா - பாக். இடையே சீனா சமரசம் செய்ததா? பிரதமர் பதிலளிக்க வேண்டும்! - காங்கிரஸ் வலியுறுத்தல்!

ஓம் சரவணபவ... தென்னாப்பிரிக்க வீரரின் முருகன் டாட்டூ!

SCROLL FOR NEXT