மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹூக்ளி பகுதியைச் சேர்ந்த மக்கள் அன்னையர் தினத்தையொட்டி பரிசுகள் வழங்கியுள்ளனர்.
மோடி, அவரது தாயார் ஹீராபென் உடன் இருப்பது போலான ஓவியத்தை இருவர் பரிசளித்தனர். விழா மேடையில் அமர்ந்திருந்தோர் தாங்கள் மோடிக்காக வரைந்த படங்களை உயர்த்திக் காட்டி மோடியின் கவனத்தைப் பெற முயன்றனர். மோடி நன்றி தெரிவித்து அவற்றை பெறச் செய்தார்.
மேற்குலக நாடுகள் மே 12-ம் தேதியை அன்னையர் தினமாக கொண்டாடுவதாகவும் இந்தியர்களுக்கு ஆண்டின் 365 நாளும் அன்னையர் தினம்தான் எனவும் மோடி பேசியுள்ளார்.
அவர், “365 நாள்களுக்கும் நாட்டின் மக்கள் அம்மாவுடனான உறவை கொண்டாடுகிறார்கள். ஆண்டின் அனைத்து நாள்களிலும் துர்க்கையில் தொடங்கி காளி, பாரத மாதா அனைவரையும் நாம் வணங்குகிறோம்” என தெரிவித்துள்ளார்.
சில நாள்களுக்கு, முன்பாக மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது தனது அம்மாவிடம் ஆசி பெறாமல் தான் தாக்கல் செய்யும் முதல் மனு இது என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.