நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்(சிபிஎஸ்இ) கீழ் நடைபெறும் பள்ளிகளில், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ஆம் தேதி முடிவடைந்தன.
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 20-ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் முன்னதாக தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், தற்போது சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகளை www.cbse.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு மதிப்பெண் சான்றிதழை டிஜி லாக்கர் மூலம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 98.47 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விஜயவாடா மண்டலத்தில் 99.04 சதவிகிதம் மாணவர்களும், பெங்களூரு மண்டலத்தில் 96.95 சதவிகிதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.