சுஷில் குமாா் மோடி (கோப்பு படம்)
இந்தியா

சுஷில் குமார் மோடி மறைவுக்கு காங்கிரஸ் இரங்கல்!

பிகாா் மாநில முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமாா் மோடியின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

DIN

பாஜக மூத்த தலைவரும், பிகாா் மாநில முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமாா் மோடி (72) திங்கள்கிழமை இரவு காலமானாா்.

இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘முன்னாள் துணை முதல்வரும், பிகாரின் மூத்த தலைவருமான சுஷில் மோடியின் மறைவுக்கு அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களது கொள்கைகள் வேறுபட்டவை, ஆனால், ஜனநாயகத்தில், தேசிய நலன் முதன்மையானது. அவர் ஜிஎஸ்டி கவுன்சிலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’ என அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'சுஷில் மோடியின் துக்கமான மறைவு பற்றி இன்று அதிகாலையில் படித்தேன், 70-களின் மத்தியில் பிகாரில் ஜேபி இயக்கத்தில் புகழ்பெற்ற அவரும், நானும் முற்றிலும் எதிரெதிரான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். எங்களது கொள்கைகளும் எதிரெதிரானவை. ஆனால், பல ஆண்டுகளாக எங்கள் தனிப்பட்ட நட்பைப் பகிர்ந்து கொள்வதற்கு அது தடையாக இல்லை.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது சில காலம் மாநில நிதியமைச்சர் கவுன்சில் தலைவராக அவர் இருந்தார். பிரணாப் முகர்ஜி மற்றும் ப.சிதம்பரம் ஆகிய இருவருடனும் பணியாற்றினார்.

மாநிலங்களவையில் அவர் ஆற்றிய உரைகள் மிகுந்த கவனத்துடன் கேட்கப்பட்டன. அரசியல் எதிரிகள் மீதான அவரது விமர்சனங்கள்கூட கண்ணியமானவை’ என அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு புற்று நோய் பாதிப்பு இருப்பதை கடந்த மாதம் (ஏப்ரல்.3) எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தாா். இதனால், அவா் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் கலந்துகொள்ளவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன விலங்குகளை வேட்டையாடிய 4 பேருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு; 3 போ் காயம்

ரோஹிணி: வடிகாலில் குதித்த பெண் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 25 மி.மீ மழை

மகனின் திருமண அழைப்பிதழை கொடுக்கச் சென்ற பெண் விபத்தில் உயிரிழப்பு

SCROLL FOR NEXT