அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ANI
இந்தியா

ஞானவாபி, மதுராவில் கோயில் கட்டுவோம்: அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சை

பாஜக 400 தொகுதிகளில் வென்றால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என்றார் ஹிமந்த பிஸ்வ சர்மா.

DIN

வாரணாசியில் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்திலும், மதுரா கிருஷ்ண ஜெம்ம பூமியிலும் கோயில்களை கட்டுவோம் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த தேர்தலில் 300 தொகுதிகளில் வெற்றி பெற்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டினோம், இந்த முறை 400 தொகுதிகளில் வெற்றி பெற்று ஞானவாபி மசூதி இடத்திலும், மதுரா கிருஷ்ண ஜென்மபூமி இடத்திலும் கோயில்களை கட்டுவோம் என்று தேர்தல் பிரசாரத்தில் பேசியுள்ளார்.

கிழக்கு தில்லி பாஜக வேட்பாளரை ஆதரித்து லட்சுமி நகரில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

“காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒரு காஷ்மீர் இந்தியாவிலும், மற்றொன்று பாகிஸ்தானிலும் இருந்ததாக கருதினோம். ஆனால், அது நனது காஷ்மீர். ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் குறித்து ஒருபோதும் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சியில் விவாதம் நடத்தியது இல்லை. 400 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவில் இணைக்கப்படும். ஏற்கெனவே அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டது.

பிரதமர் மோடி ஓபிசி பிரிவில் இருந்து வந்தவர். கடந்த 10 ஆண்டுகளில் இடஒதுக்கீட்டை வலுப்படுத்தியுள்ளோம். ஆனால், எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை அழித்துவிட்டு முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கர்நாடகத்தில் ஏற்கெனவே அதனை தொடங்கிவிட்டார்கள்.” எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், ஞானவாபி மசூதி நிலவறையில், ஹிந்து கடவுள்களுக்கு பூஜை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மதுராவில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி வளாகத்தில் அமைந்துள்ள ஷாஹி இத்கா மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், அலகாபாத் நீதிமன்றத்தில் உத்தரவை அமல்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT