முகப்பு
இந்தியா

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 30 வரை நீட்டிப்பு!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் மே 30-ம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 21 மே, 2024 at 9:12 AM
பகிர்:

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவின் காவல் மே 30-ம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலால் கொள்கை வழக்கில் தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை(சிபிஐ) கடந்தாண்டு பிப். 26 ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையும் தொடர்ந்து சிசோடியாவிடம் விசாரித்து வருகின்றது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரசாரம் மேற்கொள்வதற்காக கடந்த வாரம் சிசோடியா இடைக்கால ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால், சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்ததை அடுத்து, மணீஷ் சிசோடியா மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளார்.

மணீஷ் சிசோடியாவின் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அவர் கானொளி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் மே 30-ம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →