முகப்பு
இந்தியா

சபரிமலை சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 3 வயது குழந்தை உயிரிழப்பு!

திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு சென்ற வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Updated On : 15 மே, 2024 at 2:54 PM
- படம் | எக்ஸ் தளம்
பகிர்:

திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வைகாசி மாதத்தின் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று (மே. 15) திறக்கப்பட்டது. இந்த நிலையில், சபரிமலையில் தரிசனம் முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம் துலாபள்ளி அருகே சாலையின் வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக பேருந்து கவிழ்ந்துள்ளது.

அந்த வேனில் இரு குழந்தைகள் உள்பட 17 பேர் பயணித்ததாகவும், விபத்தில் வேனில் பயணித்த 3 வயது சிறுவன் பிரவீன் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

பேருந்தை ஓட்டுநர் அதிவேகத்தில் இயக்கியதே விபத்துக்கான காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments