இந்தியா

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்!

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார்!

DIN

மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே சிந்தியா உடல்நலக் குறைவால் இன்று(மே15) காலமானார்.

இவர் கடந்த இரண்டு மாதங்களாக தில்லி உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவனையில் இன்று காலை 9.30 மணியளவில் ராஜே சிந்தியா காலமானதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ராஜே சிந்தியாவின் உடல், தில்லியில் உள்ள இல்லத்தில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 7 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் எனவும், பின்னர் அவரது சொந்த ஊரான மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியருக்கு இறுதி அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் ராஜே சிந்தியா நேபாள அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT