முகப்பு
இந்தியா

கேஜரிவாலின் உதவியாளருக்கு மகளிர் ஆணையம் சம்மன்!

கேஜரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Updated On : 16 மே, 2024 at 9:54 AM
பகிர்:

ஆத் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் தொடர்பாக வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகுமாறு அரவிந்த் கேஜரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமாருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த திங்களன்று ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் தில்லி மகளிா் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஸ்வாதி மாலிவால் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை சந்திப்பதற்காக அவரது அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு சென்றாா். அப்போது முதல்வரின் தனி உதவியாளா் பிபவ் குமாா் தன்னிடம் தவறாக நடந்துகொண்டு தாக்கியதாக அவா் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி ஒப்புக்கொண்டுள்ளது.

இதையடுத்து, கேஜரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் தன்னை தாக்கியதாக ஸ்வாதி மாலிவால் குற்றம் சாட்டியதையடுத்து தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து பிபவ் குமாருக்கு சம்மன் வழங்கியுள்ளது.

Advertisement

தேசிய மகளிர் ஆணையம் அனுப்பிய சம்மனில், இந்த விவகாரத்தில் கேஜரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமார் மே17 (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments