முகப்பு
இந்தியா

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

Updated On : 17 மே, 2024 at 5:22 AM
ராஜ்நாத் சிங்
பகிர்:

லக்னௌ: நமது நாட்டைப் பற்றி ஒருபோதும் சாதகமாகப் பேசாத நமது அண்டை நாடான பாகிஸ்தான், சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை அந்த நாட்டின் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள் என்று லக்னௌ தொகுதி பாஜக வேட்பாளரும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், "2027-ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் இந்தியா மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும். நமது நாட்டைப் பற்றி ஒருபோதும் சாதகமாகப் பேசாத நமது அண்டை நாடான பாகிஸ்தான், சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை தற்போது அந்த நாட்டின் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். பாகிஸ்தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

"உலக அளவில் இந்தியா குறித்து கருத்து மாறிவிட்டதாகவும், அனைத்து நாடுகளின் தலைவர்களும் 21 ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கே சொந்தமானது என்று கூறி வருகிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.

மேலும், மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிப்பதாக பாதுகாப்பு அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

லக்னௌ மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக ராஜ்நாத் சிங், சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ரவிதாஸ் மெஹ்ரோத்ராவையும், பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) வேட்பாளர் சர்வார் மாலிக்கையும் எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

லக்னௌ மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு மே 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →