காங்கிரஸ் அறிமுகப்படுத்தியுள்ள "வாரிசுரிமை வரி" திட்டம் குறித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் நகரில் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், காங்கிரஸை 'பழைய கட்சி' எனவும், முகலாயப் பேரரசர் ஔரங்கஷீப்பின் ஆன்மா, அக்கட்சிக்குள் ஊடுருவியுள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.
அவர் பேசியதாவது, "பாஜக தேர்தலில் போட்டியிடுவது வெறும் அதிகாரத்திற்காக மட்டும் அல்ல, வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டியெழுப்புவதற்காக. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
"வாரிசுரிமை வரி" என்பது ஔரங்கஷீப் விதித்த 'ஜிஸியா' வரி போன்றது. ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது. முஸ்லிம்கள் அல்லாத குடிமக்கள் மீது ஔரங்கசீப்பால் 'ஜிஸியா' வரி விதிக்கப்பட்டது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது இந்தியாவின் 140 கோடி மக்களின் உணர்வுகளை குறிக்கிறது. அயோத்தியில் உள்ள அவரது கோயிலை அழிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வராமல் இருப்பதை ராமர் பார்த்துக்கொள்வார்.
2014-க்கு முன் இருந்த காங்கிரஸ் ஆட்சியில், ஒவ்வொரு இந்து பண்டிகைக்கு முன்பும் கலவரம் நடக்கும்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பவர்கள் அந்த நாட்டுக்குச் சென்று பிச்சை எடுக்க வேண்டும். பாகிஸ்தானை புகழ்வோருக்கு இந்தியாவில் இடமில்லை" என்று யோகி ஆதித்யநாத் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.