இந்தியா

உங்கள் ஆசை.. என் பொறுப்பு.. ராஜீவ் நினைவில் ராகுல் உருக்கம்

உங்கள் ஆசை.. என் பொறுப்பு.. என்று பதிவிட்டு ராஜீவ் நினைவுநாளில் ராகுல் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

DIN

உங்கள் ஆசை.. என் பொறுப்பு.. என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் நினைவுநாளில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு, புது தில்லியில் உள்ள வீர் பூமியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ராஜீவ் காந்தியின் நினைவு நாளான மே 21ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய நாளில், தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் ராகுல் காந்தி.

அந்த புகைப்படத்துடன்

உன் கனவுகள், என் கனவுகள்,

உங்கள் ஆசைகள், என் பொறுப்புகள்.

உன் நினைவுகள், இன்றும் என்றும், என்றும் என் இதயத்தில். என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

உத்தரகண்டில் மழை, வெள்ளம்: 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது - தோ்தல் அதிகாரிகள் தகவல்

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

SCROLL FOR NEXT