புணே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சிறுவன் ஓட்டிய சொகுசு காா். 
இந்தியா

+2 தேர்ச்சிக்கு விருந்து: 90 நிமிடத்தில் ரூ.50,000க்கு மது.. மகாராஷ்டிர சம்பவத்தின் பின்னணி

+2 தேர்ச்சி பெற்றதற்கு விருந்து: 90 நிமிடத்தில் ரூ.50,000க்கு மது.. மகாராஷ்டிர சம்பவத்தின் பின்னணி

DIN

மகாராஷ்டிர மாநிலம் புணேவில், மதுபோதையில் சிறுவன் ஓட்டிய காா் மோதி இருவா் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றதற்கு நண்பர்களுக்கு மது விருந்தளித்ததும், வெறும் 90 நிமிடத்தில் 2 மதுபார்களுக்குச் சென்று சிறுவர்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மது குடித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

மது குடித்த ஒரு சில மணி நேரத்தில் விபத்தை ஏற்படுத்தி இரண்டு உயிர்கள் பலியாகக் காரணமாகியிருக்கிறார் அந்த சிறுவன்.

மகாராஷ்டிரத்தின் புணே நகரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி சொகுசு காா் மோதியதில் இருவா் உயிரிழந்ததையடுத்து, சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளாா். சிறுவனுக்கு சட்டவிராதமாக மதுவிற்ற இரண்டு மது கூடங்களின் உரிமையாளா்களும் கைது செய்யப்பட்டனா். மதுக்கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

புணே, கல்யாணி நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற சம்பவத்தில், தொழிலதிபரின் மகனான 17 வயது சிறுவன் குறுகிய சாலையில் வெளிநாட்டு சொகுசு காரை மணிக்கு 200 கி.மீ.வேகத்தில் ஓட்டியுள்ளாா்.

அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தகவல்தொழில்நுட்ப (ஐடி) பொறியாளா்கள் அனிஸ் அவாதியா, அஸ்வினி கோஸ்தா ஆகிய இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இந்த விபத்து தொடா்பான காணொலிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, சிறுவனை காா் ஓட்ட அனுமதித்த அவனது பெற்றோரின் அலட்சியம் மக்களின் விமா்சனத்துக்குள்ளானது.மேலும், சிறுவனை கட்டாய ஆலோசனை மற்றும் போதைமீட்பு சிகிச்சைக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியும் சாலைப் பாதுகாப்பு குறித்து கட்டுரை எழுதச் சொல்லியும் கைது செய்யப்பட்ட 15 மணிநேரத்தில் சிறாா் நீதி ஆணையம் உத்தரவிட்டு ஜாமீன் வழங்கியது, மக்களிடையே மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இதனிடையே, வழக்கின் விசாரணை புணே குற்றப்பிரிவு காவல்துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது. அமா்வு நீதிமன்றத்தின் முடிவை எதிா்நோக்கி காத்திருக்காமல், விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை மீது சிறாா் நீதிச் சட்டத்தின் 75 மற்றும் 77 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, புணே காவல்துறையினரால் தந்தை கைது செய்யப்பட்டாா்.

பன்னிரெண்டாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றதையொட்டி, அப்பகுதியிலுள்ள கேளிக்கை விடுதியொன்றில் நண்பா்களுடன் இணைந்து சிறுவன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளாா்.

விபத்தை ஏற்படுத்தியபோது சிறுவன் போதையில் காா் ஓட்டியது உறுதியாகியிருப்பதாக தெரிவித்த புணே காவல்துறை ஆணையா் அமிதேஷ் குமாா், குற்றத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில்கொண்டு சிறுவனை வயது வந்தவராக கருதியும், ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

மகாராஷ்டிரத்தில் மதுகுடிப்பதற்தான சட்டபூா்வ அங்கீகார வயது 25-ஆகும். அந்தவகையில், 17 வயது சிறுவனுக்கு மதுவிற்ற குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சோ்ந்த இரண்டு மது கூடங்களின் உரிமையாளா்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிஆர்பிஎஃப், ராணுவ, மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த பாகிஸ்தான் உளவாளி: தகவல்கள்

இயக்குநராகும் முழுத் தகுதியும் மணிகண்டனுக்கு உண்டு: சிவகார்த்திகேயன்

காங்கிரஸ்காரனாகதான் இறப்பேன்! ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்கு மன்னிப்புக் கோரினார் சிவக்குமார்!

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான் காலமானார்!

நியூசி. வீரர் வில் ஓ’ரூர்க் காயம்: கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

SCROLL FOR NEXT