ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து 920 பறவைகள் அழிக்கப்பட்டன.
மொராபாடியில் உள்ள ராம் கிருஷ்ணா ஆசிரமம் நடத்தும் கோழிப்பண்ணையில் 770 வாத்துகள் உள்பட 920 பறவைகள் அழிக்கப்பட்டுள்ளது. மேலும் 4,300 முட்டைகளும் அழிக்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
போபாலில் உள்ள ஐசிஏஆர்- விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில், ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸின் எச்5என்1 இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து பண்ணையில் உள்ள கோழிகள் மற்றும் முட்டைகள் அழிக்கப்பட்டதாக அதிகாரி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.