இந்தியா

புணேவில் படகு கவிழ்ந்து 6 பேர் மாயம்!

கனமழை மற்றும் பலத்த காற்றை பொருட்படுத்தாமல் படகு இயக்கியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

DIN

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள உஜானி அணையில் செவ்வாய்க்கிழமை மாலை படகு கவிழ்ந்ததில் 6 பேர் மாயமாகியுள்ளனர்.

புணே நகரில் இருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ள உஜானி அணைப் பகுதியில் கலாஷி மற்றும் பூகாவ் கிராமங்களுக்கு இடையே படகு சேவை இயக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில் நேற்று மாலையும் படகு தொடர்ந்து இயக்கப்பட்ட நிலையில், கலாஷி கிராமம் அருகே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த படகில் பயணித்த ஒரு பெண், இரண்டு குழந்தைகள் உள்பட 6 பேர் நீரில் மூழ்கியதாக வட்டாச்சியர் தெரிவித்துள்ளார்.

தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு - கத்தார் எச்சரிக்கை!

“ஜல்லிக்கட்டுனா.. எங்க ஊரு கயிறுதான்!” விறுவிறுப்பாக நடைபெறும் மூக்கணாங்கயிறு விற்பனை!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.90.21ஆக நிறைவு!

மன அழுத்தம்... உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

SCROLL FOR NEXT