முகப்பு
இந்தியா

பெங்களூருவில் 3 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பெங்களூருவில் நட்சத்திர உணவகம் உள்ளிட்ட 3 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு..

இந்தியா

பெங்களூருவில் 3 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பெங்களூருவில் நட்சத்திர உணவகம் உள்ளிட்ட 3 உணவகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு..

Updated On : 23 மே, 2024 at 9:42 AM
பகிர்:

கர்நாடகத்தின் பெங்களூருவில் உள்ள மூன்று உணவகங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்ததாக தென்கிழக்கு பெங்களூரு காவல்துறை துணை ஆணையர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலில் திமுக தொடர்புடைய ஜாபர் சாதிக் போதைப்பொருள் ஊழலிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் நோக்கில் குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டு நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளில் குண்டுவெடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவக ஊழியர் ஆபத்தான இந்த மின்னஞ்சலைக் கண்டறிந்ததும், உள்ளூர் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட உணவகங்களில் ஐந்து நட்சத்திர உணவகமும் ஒன்றாகும்.

இதையடுத்து, 3 உணவகங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த மார்ச் 1-ஆம் தேதி பெங்களூருவின் தகவல் தொழில்நுட்ப வழித்தடத்தில் உள்ள புகழ்பெற்ற உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் மதிய உணவு நேரத்தில் குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு வெடித்து 9 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →