Center-Center-Delhi
இந்தியா

மக்களவைத் தேர்தல் 6-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சரியாக 10 நாள்களே உள்ள நிலையில் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

DIN

மக்களவைத் தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, தில்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 428 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இந்த நிலையில், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும், குடியரசுத் தலைவர் முர்மு, சோனியா, ராகுல், கேஜரிவால், பிரியங்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர். இதையடுத்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

5 மணி நிலவரப்படி 57.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடைசி கட்ட மக்களவைத் தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சரியாக 10 நாள்களே உள்ள நிலையில் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT