கோல் இந்தியா மூலதனச் செலவு அதிகரிப்பு
பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் மூலதனச் செலவு கடந்த நிதியாண்டில் ரூ.19,840 கோடியாக அதிகரித்துள்ளது.
புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் மூலதனச் செலவு கடந்த நிதியாண்டில் ரூ.19,840 கோடியாக அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் மூலதனச் செலவு ரூ.19,840 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 6.5 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனத்தின் மூலதனச் செலவு ரூ.18,619 கோடியாக இருந்தது.
நிலம் கையகப்படுத்துவதற்கான மூலதனச் செலவு 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.3,367 கோடியாக இருந்தது. இது, மதிப்பீட்டு நிதியாண்டில் 52.5 சதவீதம் உயா்ந்து ரூ.5,135 கோடியாக உள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.