கோப்புப் படம். 
இந்தியா

ஜம்மு காஷ்மீர்: மோட்டார் ஷெல் வெடித்ததில் மூவர் காயம்!

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் திறந்தவெளியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் மூன்று பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

DIN

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் திறந்தவெளியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் மூன்று பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீ விபத்து காரணமாக துருப்பிடித்த மோட்டார் ஷெல் வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இரவு சுமார் 8.15 மணியளவில் காரா மதனா கிராமத்தில் சில விவசாயிகள் வயலில் பயிர் கழிவுகளை எரித்துக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பில் மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், தீ விபத்து காரணமாக துருப்பிடித்த மோட்டார் ஷெல் வெடித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. கடந்த காலங்களில் வயல்களில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... -தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

பூங்காற்று... ஸ்ரேயா கோஷல்!

SCROLL FOR NEXT