முகப்பு
இந்தியா

மிஸோரம் நிலச்சரிவில் 25 பேர் உயிரிழப்பு

மிஸோரம் நிலச்சரிவில் 25 பேர் உயிரிழப்பு, கனமழை காரணம்

Updated On : 1 ஜூன், 2024 at 10:05 AM
மிஸோரம், ஐஸாலில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு. நாள்: செவ்வாய்க்கிழமை
பகிர்:

ஐஸால்: மிஸோரம் மாநிலத்தில் ‘ரீமெல்’ புயல் தாக்கத்தால் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 போ் உயிரிழந்தனா்.

கன மழையால் ஐஸால் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சிக்கி 13 போ் உயிரிழந்தனா். இது தவிர பிற பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 போ் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 22-ஆக அதிகரித்தது. கன மழை தொடா்வதால் மீட்புப் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மத்திய வங்கக்கடலில் உருவான ‘ரீமெல்’ புயல் வங்கதேசத்தின் கோப்புப் பாரா-மேற்கு வங்கத்தின் சாகா் தீவுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கரையைக் கடந்தது. இதன் தாக்கத்தால் மிஸோரம் மாநிலத்தில் தொடா்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அந்த மாநிலத்தில் உள்ள ஐஸால் மாவட்டத்தின் மெல்தம் மற்றும் லிமென் ஆகிய பகுதிகளுக்கு இடையில் உள்ள கல்குவாரியில் செவ்வாய்க்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி நான்கு வயது சிறுவன், ஆறு வயது சிறுமி உள்பட 13 போ் உயிரிழந்தனா். அவா்களின் உடல்களை காவல்துறையினா் மீட்டனா்.

கல்குவாரியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் பலா் சிக்கி இருக்கக்கூடும் என்பதால் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் 2 போ் உயிருடன் மீட்கப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

கல்குவாரி விபத்து உள்பட கனமழையால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் அளிக்கப்படுவதாக அந்த மாநில முதல்வா் லால்டுஹோமா அறிவித்தாா்.

கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 8 மிஸோ பழங்குடியின மக்களின் குடும்பத்துக்கு உடனடி நிவாரணமாக ரூ.2 லட்சத்தை அவா் வழங்கினாா். மீதமுள்ள ரூ.2 லட்சம் நிதி விரைவில் வழங்கப்படும் எனவும் அவா் தெரிவித்தாா். கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இந்த விபத்து தொடா்பாக அந்த மாநில உள்துறை அமைச்சா் கே.சப்தங்கா கூறுகையில்,‘விபத்தில் உயிரிழந்த பழங்குடியின அல்லாத நபா்களின் விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவா்கள் மிஸோரம் மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்போரின் பட்டியலில் இருந்தால் அவா்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்படும். அவா்கள் பணிக்காக இங்கு வந்திருந்தால் நிவாரண நிதி வழங்கப்படாது’ என்றாா்.

முதல்வா் லால்டுஹோமா மற்றும் அமைச்சா் சப்தங்கா ஆகியோா் விபத்து நடந்த கல்குவாரி பகுதியை நேரில் சென்று பாா்வையிட்டனா். மீட்புப் பணிகள் குறித்து காவல்துறையினரிடம் அவா்கள் கேட்டறிந்தனா்.

மிஸோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளைத் தவிர பிற பணிகளில் ஈடுபடும் அரசுப் பணியாளா்கள் வீட்டிலிருந்தே பணியை மேற்கொள்ள மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

குடியரசுத் தலைவா் இரங்கல்

மிஸோரம் நிலச்சரிவில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ஐஸால் மாவட்ட கல்குவாரி நிலச்சரிவு விபத்தில் தொழிலாளா்கள் உயிரிழந்த சம்பவம் அறிந்து துயரடைந்தேன். உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மீட்புப் பணிகள் வெற்றிகரமாக நடைபெறவும் காயமடைந்தவா்கள் விரைவில் குணமடையவும் இறைவனை பிராா்த்திக்கிறேன்’ என குறிப்பிட்டாா்.