ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் 
இந்தியா

அம்பானி வீட்டுத் திருமண நிகழ்வுகள்: இந்த முறை கப்பலில்..

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமண நிகழ்வுகள்: கப்பலில் பிரமாண்ட விருந்து

DIN

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சண்ட் திருமணத்துக்கு முந்தைய இரண்டாவது விருந்து கப்பலில் நடைபெறவுள்ளது.

முதல் விருந்து குஜராத் ஜாம்நகரில் நடைபெற்றது. மூன்று நாள்கள் நடந்த விருந்தில் ஏராளமான தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள், பாடகர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மற்றுமொரு திருமணத்துக்கு முந்தைய நிகழ்வாக திட்டமிடப்பட்டுள்ள கப்பல் விருந்து மே 28 முதல் 30 வரை நடைபெறவுள்ளது. இத்தாலியில் இருந்து புறப்படும் கப்பல் தெற்கு பிரான்ஸ் வரை செல்லவுள்ளது.

800 பிரபலங்கள் இந்த விருந்தில் கலந்துகொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட் பிரபலங்களான சல்மான் கான், ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பார்ஸி, தாய், மெக்சிகன் மற்றும் ஜப்பானிய உணவுகள் செய்யப்படவுள்ளதாகவும் விருந்தினரை கவனிக்க ஏராளமான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

4,380 கிமீ கப்பல் பயணத்தில் திருமணத்துக்கு முந்தைய நிகழ்வை திட்டமிட்டுள்ள ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமணம் ஜுலை 12-ல் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT