இந்தியா

அதிரவைக்கும் குழந்தை கடத்தல் கும்பல்: 11 பச்சிளம் குழந்தைகள் மீட்பு!

ஹைதராபாத்தில் குழந்தைக் கடத்தல் கும்பல் கைது, 11 குழந்தைகள் மீட்பு

DIN

மாநிலங்களுக்கிடையே குழந்தைக் கடத்தலில் ஈடுபடும் கும்பலை கைது செய்த ஹைதராபாத் காவலர்கள் அவர்களிடமிருந்து 11 குழந்தைகளை மீட்டுள்ளனர்.

தில்லி மற்றும் புணேவில் உள்ள மூன்று பேரிடமிருந்து குழந்தைகளை வாங்கி தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் விற்றுவந்த 8 பெண்கள் உள்பட 11 பேரை ரச்சகொண்டா காவல் ஆணையகத்துக்கு உள்பட்ட மெடிபள்ளி காவலர்கள் கைது செய்துள்ளனர்.

குற்றத்தில் ஈடுபட்டு வந்த தம்பதிக்கு குழந்தைகளை இந்த கும்பல் விற்று வந்ததும் அவர்கள் குழந்தை தேவைப்படுபவர்களுக்கு ரூ.1.80 லட்சம் முதல் ரூ.5.50 லட்சம் வரை பெற்று கொண்டு குழந்தைகளை விற்பதும் தெரியவந்துள்ளது.

11 குழந்தைகளும் ஒரு மாதம் முதல் 2.5 மாதத்திற்குள் பிறந்தவர்கள். ஒன்பது பெண் குழந்தைகள் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள்.

தில்லி மற்றும் புணேவில் உள்ள கிரண், பிரீத்தி மற்றும் கன்னையா ஆகிய மூவரும் 50-க்கும் அதிகமான குழந்தைகளை கைது செய்யப்பட்டவர்களுக்கு விற்றுள்ளனர்.

மே 22-ம் தேதி ஷோபா ராணி என்கிற பதிவுசெய்யப்பட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த கும்பல் பிடிப்பட்டுள்ளதாக ரச்சகொண்டா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

SCROLL FOR NEXT