புது தில்லியில் வெப்பம் தாளாது முகத்தை மூடி சைக்கிள் ஓட்டும் நபர் ANI
இந்தியா

வடக்கு மாநிலங்களில் வெப்ப அலை: தில்லியில் 50 டிகிரி செல்சியஸ்!

தில்லி உள்பட வடக்கு இந்தியாவில் வெப்ப அலை.. பல இடங்களில் 50 டிகிரிக்கு மேல் வெப்பநிலை

DIN

தில்லி உள்பட வடக்கு இந்தியாவில் பல மாநிலங்களில் அதிகபட்ச வெப்பநிலை செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வடக்கு பகுதியில் வீசி வரும் வெப்ப அலையால், தலைநகரான தில்லியில் உள்ள முங்கேஷ்புர் மற்றும் நரேலா ஆகிய பகுதிகளில் 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. சராசரிக்கு 9 டிகிரி அதிகமான வெப்ப நிலை இது. அதே போல நஜஃப்கர் மற்றும் சப்துர்ஜங் பகுதிகளில் முறையே 49.8 டிகிரி, 48.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும் அதிகபட்ச வெப்பநிலையை பதிவாகியுள்ளது.

தில்லியில் சாலையில் நீர் தெளிக்கும் வாகனம்

ராஜஸ்தான் சுரு பகுதியில் 50.5 டிகிரி செல்சியஸ் -வழக்கத்தை விட 7.5 டிகிரி அதிகம்- பதிவாகியுள்ளது.

ஹரியாணாவின் சிர்சா பகுதியில் உச்சபட்ச வெப்பநிலையாக 50.3 டிகிரியும் ஹிசார் பகுதியில் 49.3 டிகிரியும் பதிவாகியுள்ளது.

பஞ்சாப்பில் 49.3 டிகிரி செல்சியஸும் உத்தரப் பிரதேசம் ஜான்சியில் 49 டிகிரி செல்சியஸும் வாரணாசி மற்றும் கான்பூரில் 47.6 டிகிரி செல்சியஸும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்தது. நிவாரி, தாடியா, ரேவா, கஜுராகோ ஆகிய இடங்களில் 48 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பநிலை நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூலி இசை வெளியீட்டு விழாவில் ஆமிர் கான்!

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

SCROLL FOR NEXT