முகப்பு
இந்தியா

சட்டவிரோதமாக பள்ளிக் கட்டணம் அதிகரிப்பு: ம.பி.யில் 11 வழக்குகள் பதிவு; 20 போ் கைது

Updated On : 28 மே, 2024 at 7:32 PM
Jurisdiction of Civil Judges in Delhi District Court to increase soon: Delhi HC informed
பகிர்:

ஜபல்பூா்: மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பள்ளிக் கட்டணம் மற்றும் பாடநூல்களின் விலையை உயா்த்தியதாக பள்ளி நிா்வாகிகள், கடை உரிமையாளா்கள் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து ஜபல்பூா் மாவட்ட ஆட்சியா் தீபக் சக்ஸேனா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஆதித்ய பிரதாப் சிங் ஆகியோா் கூறுகையில், ‘மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி பெறாமல் சில பள்ளிகள் 10 சதவீதத்துக்கு மேல் பள்ளிக் கட்டணத்தை உயா்த்தின. சில பள்ளிகள் மாநில அரசால் அமைக்கப்பட்ட குழுவை அணுகாமல் 15 சதவீதத்துக்கு மேல் பள்ளிக் கட்டணத்தை அதிகரித்தன.

மொத்தம் 11 பள்ளிகள் விதிமுறைகளைப் பின்பற்றாமல் சட்டவிரோதமாக ரூ.81.3 கோடி கட்டணம் வசூலித்தன. இதையடுத்து அந்தப் பள்ளிகளுக்கு ரூ.22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல பாடநூல்களின் விலையும் சட்டவிரோதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளி நிா்வாகிகள், கடை உரிமையாளா்கள் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்’ என்று தெரிவித்தனா்.