மல்லிகார்ஜுன கார்கே 
இந்தியா

மோடி அனைவரையும் அழித்து வருகிறார்: கார்கே

‘போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிர் தியாகம் செய்த போதிலும், எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.’

DIN

பிரதமர் நரேந்திர மோடி அனைவரையும் அழித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பஞ்சாப்பில் பிரசாரம் செய்த கார்கே செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

“பஞ்சாப் இளைஞர்கள் மத்தியில் விரக்தியும், நம்பிக்கையின்மையும் நிலவுகிறது. மாநிலத்தின் எதிர்காலத்துக்கு போதைப் பழக்கம் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. வேலைவாய்ப்புக்காக பஞ்சாப் மக்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டி கொள்கையால் பஞ்சாபில் சிறு, குறு தொழில்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. எங்கள் அரசு ஆட்சிக்கு வந்ததும் சிறு, குறு தொழில்களுக்கு உதவி செய்வோம். தொழிலதிபர்கள் அமைப்புகளால் மிரட்டப்படுவது முடிவுக்கு வரும்.

பஞ்சாப் மற்றும் ஹரியாணா விவசாயிகள் குறைந்த நிலத்தில் கூட அதிக தானியங்களை பயிரிடுகின்றனர். இதன் காரணமாக நாட்டின் தானிய இருப்பு நிரம்பியுள்ளது. ஆனால், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டபோது, ​​மோடி அரசு அவர்களுக்குப் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியது. விவசாயிகள் போராட்டத்தில் 700 பேர் உயிர் தியாகம் செய்த போதிலும், எவ்வித மாற்றத்தையும் மோடி கொண்டுவரவில்லை.

மோடி அனைவரையும் அழித்து வருகிறார். அக்னிவீர் திட்டத்தை அறிமுகப்படுத்தி இளைஞரின் மனஉறுதியை உடைத்துள்ளார். 30 லட்சம் அரசுப் பணிகள் காலியாக உள்ளது, ஆனால் மோடி அரசு நிரப்பவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேர்தல் ஆணையர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்! ராகுல் எச்சரிக்கை

ரஷிய எண்ணெய் கொள்முதல் போருக்கான நிதியுதவி..! இந்தியா மீது டிரம்ப் ஆலோசகர் தாக்கு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

ரஷியா ஒப்புக்கொண்டால் இருதரப்பு பேச்சுக்கு தயார்: உக்ரைன் அதிபர்

போர் நிறுத்த முதல்படி..! அமைதிப் பேச்சுவார்த்தை பணிகளைத் தொடங்கிய டிரம்ப்!

SCROLL FOR NEXT