பிகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தில் உள்ள அரியாரி பிளாக்கில் உள்ள மன்கவுல் நடுநிலைப் பள்ளியில் இன்று (மே 29) காலை 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவான நிலையில், காலை நடந்த இறை வணக்கத்தின் போது கடும் வெப்பத்தின் காரணமாக 7 மாணவர்கள் மயங்கி விழுந்தனர்.
ஆசிரியர்கள், மயக்கமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் சுரேஸ் பிரசாத் கூறுகையில், காலை நடைபெற்ற இறை வணக்கத்தின் போது ஏற்பட்ட கடுமையான வெயிலின் தாக்கத்தால் 6-7 மாணவர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். முதலுதவி செய்தும் மாணவர்கள் கடுமையான சிரமம் அடைந்தனர்" என்றார்.
மருத்துவர் ரஜினிகாந்த் குமார் கூறுகையில், ''வெப்பம் அதிகரித்து வருவதால், மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இங்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது நலமாக உள்ளனர். மாணவர்கள் எப்போதும் நீர்ச் சத்துடன் இருக்க வேண்டும். அவர்களால் முடிந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்பத்தில் இருந்து வெளியே வராமல் இருக்க வேண்டும். எங்கு சென்றாலும் மாணவர்கள் அனைவரும் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்ல வேண்டும்'' என்றார்.
பிகாரில் வெப்பநிலை 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து வருவதால், பல்வேறு பள்ளிகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீரிழப்பு காரணமாக மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.