முகப்பு
இந்தியா

மே 31-ல் பிரஜ்வல் ரேவண்ணா கைது? சிறப்பு புலனாய்வுக் குழு தீவிரம்!

விமான நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா மே 31-ல் கைது?

Updated On : 29 மே, 2024 at 3:01 PM
பிரஜ்வல் ரேவண்ணா
பகிர்:
Updated On : 29 மே, 2024 at 2:46 PM

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மதசார்பற்ற ஜனதா தள எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மே 31-ம் தேதி இந்தியாவுக்கு வருவதற்கு விமான பயணச்சீட்டு பதிவானது உறுதி செய்யப்பட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு வட்டாரங்கள் தகவல் தெரிவிகின்றன.

லூஃப்தான்சா விமானத்தில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு ஜெர்மனி முனிச் நகரிலிருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் அவர் வரவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பிரஜ்வல் மீதான பாலியல் விடியோ வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினர் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் அவரை கைது செய்ய ஏற்பாடுகள் செய்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விமான நிலையத்தில் வைத்தே பிரஜ்வலை கைது செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கைது நடவடிக்கையில் தாமதம் இருக்குமா என்கிற கேள்விக்கு அவர், “அதற்கான நடைமுறைகள் தயாராகிவருகின்றன. நாம் சென்று அவரை வெறுமனே கைது செய்து திரும்ப முடியாது. அவர் விடியோ வெளியிட்டதன் பின்னணி என்னவென தெரியவில்லை. மே 31 என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். அன்று வேறு மாதிரி நடந்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா திங்கள்கிழமை முதல்முறையாக வெளியிட்ட விடியோவில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜராவதாக குறிப்பிட்டிருந்தார்.

அவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு இவையெல்லாம் அரசியல் சதி எனவும் 2.57 நிமிடங்கள் கொண்ட அந்த விடியோவில் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.