வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 61.50 உயர்ந்துள்ளது.  
இந்தியா

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்வு

நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 61.50 உயர்ந்துள்ளது.

DIN

சென்னை: நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 61.50 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1,964.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைத்து வருகின்றன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (நவ. 1) காலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ. 61.50 உயர்த்தப்பட்டு ரூ.1,964.50 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வானது இன்றிலிருந்து (நவ. 1) அமலுக்கு வருகிறது.

தொடர்ந்து நான்கு மாதங்களாக வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்து வருவதால் உணவு விடுதிகள், தேநீா் கடைகள் உள்ளிட்ட தொழில் சாா்ந்தவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

வீட்டு சமையல் எரிவாயு உருளை விலையில் மாற்றமில்லை

எனினும், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய 5 கிலோ, 10 கிலோ, 14.2 கிலோ சமையல் எரிவாயு உருளையின் விலையில் மாற்றமின்றி ரூ.818.50 ஆகவே நீடிக்கிறது.

கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையிலும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாநதி தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்!

கூவத்தூரில் நடந்தது என்ன தெரியுமா? இபிஎஸ் குறித்து உண்மையை உடைத்த தினகரன்!

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!

வங்க தேசத்தில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம்! காரணம் என்ன?

ஆம்பூர் இளைஞர் கொலை: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!

SCROLL FOR NEXT