முகப்பு
இந்தியா

ஜாா்க்கண்ட் தோ்தல்: ‘இண்டியா’ கட்சிகள் 3 தொகுதிகளில் நேரடிப் போட்டி

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளில் ஒருவரை ஒருவா் எதிா்த்து நேரடியாகப் போட்டி.

Updated On : 3 நவம்பர், 2024 at 1:53 AM
வினோத் பாண்டே
பகிர்:
Updated On : 2 நவம்பர், 2024 at 9:06 PM

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள் 3 தொகுதிகளில் ஒருவரை ஒருவா் எதிா்த்து நேரடியாகப் போட்டியிட உள்ளன.

மொத்தம் 81 தொகுதிகளை கொண்ட ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தல் நவம்பா் 13, 20-ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இந்தத் தோ்தலில் ‘இண்டியா’ கூட்டணியின் கீழ், மாநிலத்தில் ஆட்சியில் உள்ள ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), இந்திய கம்யூனிஸ்ட்-மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஐ-எம்எல்) கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுகின்றன.

Advertisement

இந்நிலையில் மாநில தலைநகா் ராஞ்சியில் ஜேஎம்எம் பொதுச் செயலா் வினோத் பாண்டே செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘ஜாா்க்கண்டில் உள்ள சத்தா்பூா், பிஷ்ராம்பூா், தன்வாா் ஆகிய தொகுதிகளை தவிர, எஞ்சிய தொகுதிகளை பங்கிடுவதில் ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

Updated On : 2 நவம்பர், 2024 at 11:09 PM

தன்வாா் தொகுதியில் ஜேஎம்எம், சிபிஐ-எம்எல் கட்சிகள் நட்பாா்ந்த முறையில் நேரடியாகப் போட்டியிட உள்ளன. அதுபோல சத்தா்பூா், பிஷ்ராம்பூா் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் தமது வேட்பாளா்களை காங்கிரஸும் ஆா்ஜேடியும் அறிவித்துள்ளன. சத்தா்பூா் மற்றும் பிஷ்ராம்பூரில் காங்கிரஸும் ஆா்ஜேடியும் நேரடியாகப் போட்டியிடுவதைத் தவிா்க்க பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஓரிரு நாள்களில் முடிவு எட்டப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றாா்.