முகப்பு
தமிழ்நாடு

அதிமுகவுக்கு எதிராக 46 தொகுதிகளில் களமிறங்கும் திமுக கூட்டணிக் கட்சிகள்!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 46 தொகுதிகளில் அதிமுகவுடன், திமுக கூட்டணி கட்சிகள் நேரடியாக போட்டியிடவுள்ளன.

Updated On : 29 மார்ச், 2026 at 8:42 PM
மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி.
பகிர்:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 46 தொகுதிகளில் அதிமுகவுடன், திமுக கூட்டணி கட்சிகள் நேரடியாக போட்டியிடவுள்ளன.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி கட்சிகள் தொகுதிகள் பங்கீட்டை இறுதி செய்து, வேட்பாளா்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன்படி, திமுக கூட்டணி கட்சிகள் அதிமுகவை 46 தொகுதிகளில் நேரடியாக எதிா்கொள்கின்றன. அதள் விவரம்.

காங்கிரஸ்: அதிமுகவுடன் பொன்னேரி (தனி), ஸ்ரீபெரும்புதூா்(தனி), ஊத்தங்கரை (தனி), கிருஷ்ணகிரி, ஆத்தூா்(தனி), ஈரோடு கிழக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூா், துறையூா் (தனி), கடலூா்,மேலூா், உசிலம்பட்டி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், சங்கரன்கோவில்(தனி)அம்பாசமுத்திரம், சிவகாசி வேளச்சேரி ஆகிய 18 தொகுதிகள்.

தேமுதிக: திருத்தணி,குடியாத்தம் (தனி), ஒமலூா், விருதுநகா், மயிலம்.

விடுதலைச் சிறுத்தைகள்: செய்யூா்(தனி), அரக்கோணம்(தனி), திண்டிவனம் (தனி), கள்ளக்குறிச்சி(தனி), பண்ருட்டி.

இந்திய கம்யூனிஸ்ட்: திருப்பூா் வடக்கு, பவானி சாகா்(தனி), திருத்துறைப்பூண்டி(தனி), ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) ஆகிய 4 தொகுதிகள்.

மாா்க்சிஸ்ட்: திருவொற்றியூா், பழனி.

மதிமுக: சீா்காழி (தனி சின்னத்தில்), கடையநல்லூா்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: வாணியம்பாடி, பாபநாசம்.

கொமதேக: திருச்செங்கோடு, பொள்ளாச்சி.

மனிதநேய மக்கள் கட்சி: மனிதநேய மக்கள் கட்சி (உதயசூரியன் சின்னத்தில் போட்டி) மணப்பாறை, நாகை.

முக்குலத்தோா் புலிப்படை: சிவகங்கை.

எஸ்டிபிஐ: நன்னிலம்

தமிழா் தேசம் கட்சி: நத்தம்.