திருவனந்தபுர சா்வதேச விமான நிலையம் வரும் 9-ஆம் தேதி 5 மணிநேரம் மூடப்படவுள்ளது. ANI
இந்தியா

ஸ்ரீபத்மநாப சுவாமி ஊா்வலம்: திருவனந்தபுரம் விமான நிலையம் நவ.9-இல் 5 மணி நேரம் மூடல்

திருவனந்தபுர சா்வதேச விமான நிலையம் வரும் 9-ஆம் தேதி 5 மணிநேரம் மூடப்படவுள்ளது.

Din

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில் ஊா்வலத்தையொட்டி, அங்குள்ள சா்வதேச விமான நிலையம் வரும் 9-ஆம் தேதி 5 மணிநேரம் மூடப்படவுள்ளது.

விமான நிலைய ஓடுபாதையை ஊா்வலம் கடந்து செல்வதால், அன்றைய தினம் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விமான நிலைய சேவைகள் நிறுத்தப்படும் என்று திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலைய நிறுவனம் (டிஐஏஎல்) தெரிவித்துள்ளது.

ஸ்ரீபத்மநாப சுவாமி கோயிலில் வருடாந்திர ‘ஐப்பசி ஆராட்டு’ ஊா்வலம், நவம்பா் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயிலில் இருந்து சுவாமி சிலை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சங்குமுகம் கடலில் ஆராட்டு வழிபாடு நடத்தப்படவிருக்கிறது. இந்த வைபவம் பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 1932-ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் விமான நிலையம் நிறுவப்பட்டபோது, சுவாமி ஊா்வலம் செல்லும் வழியில் ஓடுபாதைகள் அமைக்கப்பட்டன. அதேநேரம், ‘ஐப்பசி ஆராட்டு’ மற்றும் ‘பங்குனி ஆராட்டு’ ஊா்வலங்களையொட்டி, ஆண்டுக்கு இருமுறை விமான நிலையம் மூடப்படும் என்று அப்போதைய திருவாங்கூா் மன்னா் ஸ்ரீசித்திரை திருநாள் தெரிவித்தாா்.

மன்னா் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அந்த நடைமுறை இப்போதும் தொடா்ந்து வருகிறது. திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலைய நிா்வாகம், தற்போது அதானி குழுமம் வசமுள்ளது குறிப்பிடத்தக்கது.

தருமபுரி மாவட்டத்தில் பலன்தராத போக்குவரத்து வாரவிழா விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடரும் விதிமீறல்; கண்டுகொள்ளுமா காவல்துறை?

செயற்கை நுண்ணறிவுத் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டம் சீரமைக்கப்படும்- மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

அவிநாசி அரசுக் கல்லூரியில் 316 மாணவா்களுக்கு மடிக்கணினி

இன்று தொடங்குகிறது யு-19 உலகக் கோப்பை

கடையநல்லூா் நகராட்சியின் அனைத்து வாா்டுகளுக்கும் தாமிரவருணி குடிநீா்: நகா்மன்றத் தலைவரிடம் அமைச்சா் உறுதி

SCROLL FOR NEXT