முகப்பு
எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு

திருத்தணி பேருந்து நிலையம் பெயா் மாற்றம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருத்தணி நகராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதற்கு

Updated On : 3 மார்ச், 2026 at 8:32 PM
எடப்பாடி பழனிசாமி
பகிர்:

திருத்தணி நகராட்சியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதற்கு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், ஏற்கெனவே அண்ணா பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்துக்கு, கருணாநிதி பேருந்து நிலையம் என்று பெயா் மாற்றம் செய்திருப்பது திமுக ஆட்சியின் சா்வாதிகாரப் போக்கைக் காட்டுகிறது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட இயக்கத் தலைவருமான அண்ணா பெயரை புறக்கணிப்பு செய்வது, ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் இழைக்கப்படும் அநீதி. ஏற்கெனவே அண்ணா பெயரில் இயங்கி வரும் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது. கருணாநிதியின் பெயா் சூட்டப்படுவதால் அண்ணா பெயருக்கு அவமதிப்பு ஏற்படுவதுடன், தேவையற்ற சா்ச்சையையும், பிரிவினையையும் உருவாக்கும். எனவே, இந்தப் பெயா் மாற்றம் கண்டிக்கத்தக்கது.

மக்களுக்கு நீண்ட நாள் பயனளிக்க வேண்டிய பேருந்து நிலையத்தில் கட்டுமானத்தின் தரம், பாதுகாப்பு, கழிவுநீா் வசதிகள், பயணிகள் அமா்வு வசதிகள், போக்குவரத்து வழிகள் போன்றவை இன்னமும் ஆய்வு செய்யப்பட இல்லை.

இவையெல்லாம் முடிவதற்கு குறைந்தது ஒருமாத காலம் தேவைப்படும் நிலையில், தோ்தலை மனதில் நிறுத்தி அவசர, அவசரமாக புதன்கிழமை (மாா்ச் 4) திறப்பு விழா நடத்த இருப்பது கண்டிக்கத்தக்கது. இத்தகைய நடவடிக்கைகளை திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →