முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

அனந்த்நாக் மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு பற்றி..

Updated On : 2 நவம்பர், 2024 at 2:59 PM
ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
பகிர்:
Updated On : 2 நவம்பர், 2024 at 1:43 PM

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹல்கன் கலி பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியதை அடுத்து இந்த மோதல் வெடித்தது. இந்திய ராணுவமும், ஐம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் ஸ்ரீநகர் செக்டார் சிஆர்பிஎஃப் இணைந்து ஹல்கன் காலி, அனந்த்நாக் பகுதியில் ஒரு கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Updated On : 2 நவம்பர், 2024 at 2:57 PM

இதையும் படிக்க: நவம்பர் மாதப் பலன்கள்!

Advertisement

ஹல்கன் காலி அருகே சந்தேசத்திற்கிடமான நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து சம்பவ இடத்தை சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதன் விளைவாக இரண்டு பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றனர்.

ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் இதேபோன்ற துப்பாக்கிச்சூடு நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இது நடந்தது. முன்னதாக காலை, ஸ்ரீநகரின் கைனார் பகுதியில் போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு சுற்றிவளைத்துத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.