நாடாளுமன்ற கட்டடம் 
இந்தியா

நவ.25-இல் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா்?

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா், நவம்பா் 25-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 20 வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Din

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா், நவம்பா் 25-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 20 வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கூட்டத் தொடரில், ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பான மசோதா மத்திய அரசு கொண்டுவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவ்வாறு மசோதா கொண்டுவரப்பட்டால், எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவிக்கும். அத்துடன், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கையும் தாக்கலாகும் என்பதால் இக்கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் இருக்கக் கூடும்.

மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் தீா்மானமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு கூட்டு அமா்வு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

”காவல்துறைக்கு சல்யூட் என்று கூறிதான் தவெக தலைவர் பேச்சைத் தொடங்கினார்” - முதல்வர் ஸ்டாலின்

தவெக சேலம் மாவட்டச் செயலரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

ஜெய்சால்மர் - ஜோத்பூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் தீ விபத்து! 20 பேர் பலி! | Bus fire

காந்தா டிரைலர் எப்போது?

மறுபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி... சோனியா பன்சால்!

SCROLL FOR NEXT