ஜெய்ராம் ரமேஷ் 
இந்தியா

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எழுப்பிய மூன்று கேள்விகள்!

பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

பிடிஐ

ஜார்க்கண்டில் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு அளித்த மூன்று வாக்குறுதிகள் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜார்க்கண்டில் நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பாஜக ஆட்சியைப் கைப்பற்ற முயல்கிறது.

இதுதொடர்பாக அவருடைய எக்ஸ் பதிவில்,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எனன ஆனது? இந்த மூன்று கேள்விகளுக்கு முதலில் பிரதமர் பதிலளிக்க வேண்டும்.

ஜார்க்கண்டில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை அப்படி எதுவும் தொடங்கப்படவில்லை.

மேலும், கோர்பா-லோஹர்தகா மற்றும் சத்ரா-கயா ரயில் பாதைகள் அமைப்பதற்கான வாக்குறுதி அளித்திருந்தார்.

உயிரியல் அல்லாத பிரதமர் இன்று ஜார்க்கண்டில் பேரணி நடத்துகிறார். மக்களிடம் வாக்கு சேகரிகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டியது அவசியம்.

லோஹர்தகா மற்றும் சத்ரா மக்கள் பல ஆண்டுகளாக சிறந்த ரயில் இணைப்பைக் கோரி வருகின்றனர், இதனால் உள்ளூர் மக்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும். ஆனால், ரயில்வே அமைச்சகம் அவர்களின் கோரிக்கைகளைப் புறக்கணித்துள்ளது.

கடந்த 2022-இல், ரயில்வே அமைச்சகம் சத்ரா-கயா ரயில் திட்டத்திற்கு அனுமதி அளித்தது, ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த முக்கியமான ரயில் இணைப்புகளுக்காக மக்கள் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? இந்த அத்தியாவசியத் திட்டங்களை முடிக்கப் பிரதமர் ஏதாவது செய்கிறாரா?

உயிரியல் அல்லாத பிரதமர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு உறுதியளித்த நிறுவனங்களை வழங்கத் தவறிவிட்டதற்கு அவர் பதிலளித்தேயாக வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெமனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

SCROLL FOR NEXT