பிரதமர் நரேந்திர மோடி PTI
இந்தியா

கனடாவில் ஹிந்துக்கள் மீது தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்!

கனடாவில் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரமர் மோடி கண்டனம்!

DIN

கனடாவில் ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனடாவின் டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத குழுவினர் நேற்று (நவ. 3) தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், கோயிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீதும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

கனடாவில் தூதரக முகாமிற்கு இந்திய அதிகாரிகளின் வருகையைக் கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிராம்ப்டன் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஹிந்து கோயில் முன்பு முழக்கங்களை எழுப்பினர்.

இதனையடுத்து கோயிலில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் மீது கொடிக்கம்பங்களைக் கொண்டு அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதால் அந்த இடம் வன்முறைக் களமாக மாறியது. இதில், அங்கிருந்த ஹிந்து மக்களை விரட்டியடிக்கப்பட்டது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பிரதமர் கண்டனம்

இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, “கனடாவில் உள்ள ஹிந்துக் கோயில் மீது வேண்டுமென்றே நடத்தப்பட்டத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேபோன்று நமது அயலக மக்களை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் அதிர்ச்சிகரமானது.

இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. இந்த விவகாரத்தில் கனடா அரசு நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம்” என்று தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்தியா வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், “பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளால் நடத்தப்படும் வன்முறைச் செயல்கள்” என குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “ஹிந்து கோயில் மற்றும் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல” என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

77 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

விஜய் குறித்த கேள்விக்கு ”பேசவேண்டிய அவசியமில்லை” என பதிலளித்த முதல்வர் Stalin

வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: லிங்க்ட்இன்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிப்பு

பழனிசாமி பயணம் போன்று எனது பயணம் இருக்காது: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT