தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் கொலைக்கு மூளையாக செயல்பட்டவரை தேடுவதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது.
மேலும், பாபா சித்திக்கை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி உள்ளிட்டவை ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டதாக விசாரணைக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை மும்பை பாந்த்ரா பகுதியில் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி இரவு மூன்று போ் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
இந்த கொலைக்கு லாரன்ஸ் பிஸ்னோய் குழுவினர் பொறுப்பேற்ற நிலையில், கொலைக்கு காரணமான 15 பேரை இதுவரை மும்பை போலீஸ் கைது செய்துள்ளனர். அவர்களில் 10 பேர் நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து தகவல் தெரிவித்துள்ள மும்பை போலீஸ், மகாராஷ்டிரத்துக்கு வெளியே 5 தனிப்படைகள் விசாரணை நடத்தி வருவதாகவும், கொலைக்கு மூளையாக செயல்பட்டவரை ஹரியாணாவில் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாபா சித்திக்கை கொலை செய்ய பயன்படுத்திய மற்றொரு ஆயுதத்தை குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ரூபேஷின் புணே வீட்டில் இருந்து மும்பை குற்றப்பிரிவு போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதுவரை 5 ஆயுதங்கள் போலீஸாரால் கைப்பற்றபட்டுள்ள நிலையில், மேலும் ஒரு ஆயுதத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.