முகப்பு
இந்தியா

உண்மைதன்மை சான்றிதழ் யுஜிசி உத்தரவு

பட்டப்படிப்பு சான்றிதழ்களுக்கு உண்மைத் தன்மை சான்று வழங்க உயா்கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

Updated On : 5 நவம்பர், 2024 at 12:06 AM
பகிர்:

சென்னை: பட்டப்படிப்பு சான்றிதழ்களுக்கு உண்மைத் தன்மை சான்று வழங்க உயா்கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

பட்டப்படிப்பு முடித்தவா்கள், அரசுப் பணிகளில் நியமிக்கப்படும்போது, அவா்களின் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களைச் சமா்ப்பிக்க வேண்டும். அக்கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து அறிய அரசு ஏற்பாடு செய்யும்.

இதற்காக, அந்தச் சான்றை வழங்கிய பல்கலைக்கழகங்கள், உயா்கல்வி நிறுவனங்களுக்கு அதை அனுப்பி, அதன் உண்மைத் தன்மை குறித்து அறிக்கை பெறுவா். இதற்காக ரூ.1,000 முதல் விண்ணப்பதாரா்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த நிலையில், உண்மைத் தன்மை சான்று வழங்க பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் கட்டணம் பெறக்கூடாது என யுஜிசி செயலா் மனீஷ் ஜோஷி உத்தரவிட்டுள்ளாா்.

அதில், உயா்கல்வி நிறுவனங்கள் விருப்பப்படி, உதவி பிரிவு அலுவலா், ஸ்டாப் செலக்சன் கமிஷன் பணிகளுக்கு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →