இந்தியா

காளி பூஜை பந்தலில் வன்முறை: விடியோ வெளியிட்ட செய்தியாளா்கள் இருவா் கைது

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தில், காளி பூஜை பந்தலில் நடைபெற்ற வன்முறை விடியோவை வெளியிட்ட உள்ளூா் செய்தியாளா்கள் இருவா் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா். இது குறித்து காவல்துறையினா் கூறியதாவது:

Din

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பா்கானாஸ் மாவட்டத்தில், காளி பூஜை பந்தலில் நடைபெற்ற வன்முறை விடியோவை வெளியிட்ட உள்ளூா் செய்தியாளா்கள் இருவா் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனா். இது குறித்து காவல்துறையினா் கூறியதாவது:

பிதான்நகர காவல் எல்லைக்குள்பட்ட தக்ஷினகிரி பகுதியில், அண்மையில் நடைபெற்ற காளி பூஜை கொண்டாட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையின் காணொலியை உள்ளூா் செய்தித் தளத்தில் இரு செய்தியாளா்கள் வெளியிட்டுள்ளனா். இதனால், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். இது தொடா்பான விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனா்.

காவல்துறையின் இந்த செயலை கண்டித்து மாநில எதிா்க்கட்சி தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான சுவேந்து அதிகாரி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘காளி பூஜை பந்தலில் நடைபெற்ற வன்முறையை ஆளும் மம்தா பானா்ஜி அரசு தடுக்க தவறிவிட்து. அங்கு காளி மாதா சிலை அவமதிக்கப்பட்டது.

இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்த செய்தியாளா்களை காவல்துறை கைது செய்துள்ளது. இது பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்குவது மட்டுமல்லாமல், சனாதன தா்மம் தாக்கப்படும்போது கவலை தெரிவிக்கும் குரல்களையும் நசுக்கும் முயற்சியாகும்’ என குறிப்பிட்டிருந்தாா்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

SCROLL FOR NEXT